The Pinanist
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Pianist”.
The Pianist என்பது 2002 ஆம் ஆண்டு ரோமன் போலன்ஸ்கி இயக்கிய ஒரு பிரான்ஸ் நாட்டுத் திரைப்படமாகும். இது உயிர் பிழைத்த ஒரு போலந்து-யூத பியானோ கலைஞரும் இசையமைப்பாளருமான Władysław Szpilman என்பவரின் சுயசரிதை புத்தகமான தி பியானிஸ்ட் (1946) என்ற ஹோலோகாஸ்ட் நினைவுக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டது. ஒரு போலந்து யூத இசைக்கலைஞர் உலகப் போரின் வார்சா கெட்டோவின் அழிவிலிருந்து தப்பிக்க போராடுகிறார் என்பதைக் கருவாக கொண்டது.
பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 4 மணிமுதல் 8 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெறும்.
இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.
அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.
இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
11.03.2022