பாலு மகேந்திரா நூலகத்தின் சேவைகள்

எமது சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமானவை

  • திரைப்படப் பட்டறைகள்

    திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளை தனித்தும் பிற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும் இலவசமாக நடாத்தி வருகிறோம்.

  • முதுநிலைப் பயிற்சிகள்

    திரைப்படப் பட்டப் படிப்புகளை தனித்தும் பிற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும் இலவசமாக நடாத்தி வருகிறோம்.

  • திரைப்படத் திரையிடல்

    மக்களிடையே திரைப்பட இரசனையை மேம்படுத்தும் நோக்கில், எமது தலைமைக் காரியாலயத்திலும், தன்னார்வ திரை இரசனை இயக்கங்கள் ஊடாகவும், உலகத் திரைப்படங்களைத் திரையிட்டு, அதுசார்ந்த விவாதங்களை நடாத்தி வருகிறோம்.

  • திரை இரசனை இயக்கங்கள்

    புத்தகங்கள், எண்மின் காணொளி வட்டு (DVD) மற்றும் திரைப்படத் திரையிடலுக்குத் தேவையான உபகரணங்களை இரவல் வழங்கி வருகிறோம்.

  • திரைத்துறைக் கண்காட்சிகள்

    திரைப்படங்கள், திரைப்படத்துறை சார்ந்த வரலாறுகள், மற்றும் திரைப்படத்துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட கண்காட்சிகளை நடாத்துதல்.

  • திரைப்பட முகாம்கள்

    பிரசித்தமான திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நிகழ்வுகளிலும், கடற்கரைகள் மற்றும் பிற சாத்தியப்படக்கூடிய வெளியிடங்களிலும் முகாம்களை அமைத்து சர்வதேசத் திரைப்படங்களை நாள் முழுவதும் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.

  • கணினி மற்றும் இணைய வசதி

    அனைவரும் தமது கல்வித் தேவைக்காக கணினி, நகல் எடுத்தல் மற்றும் இணையத் தேவைகளை எமது தலைமை நூலகத்தில் முற்றிலும் இலவசமாகப் பூர்த்தி செய்துகொள்வதற்கான ஒழுங்குபடுத்தல்களை செய்துகொடுத்துள்ளோம்.

  • சந்திப்பறைகள்

    திரைப்படத் துறைசார் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு போன்றவற்றிற்கான இட வசதிகளை இலவசமாக வழங்கி வருகிறோம்.

  • OTT

    எமது தலைமை நூலகத்தில் Amazon Prime, MUBI, Netflix போன்ற, தேவைக்கேற்ப பாவிக்கும் திரைப்படத் தளங்களைப் (OTT or VOD) பயன்படுத்தி இலவசமாகத் திரைப்படங்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியளித்து வருகிறோம்.

  • திரைப்படங்களுக்கான துணைத்தலைப்புகள்

    சிறுவர் திரைப்படங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற வேற்று மொழித் திரைப்படங்களுக்கு தமிழில் துணைத் தலைப்புகளை உருவாக்கி வருகிறோம்.

  • ஒலி நூல்கள்

    வேற்று மொழி நூல்களை, வெளியீட்டாளர்களிடம் அனுமதி பெற்று மொழிபெயர்த்தல் மற்றும் ஒலி நூல்களை உருவாக்கி வருகிறோம்.

  • சிறுவர் சினிமா

    எமது தலைமைக் காரியாலயத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர் திரைப்படங்கள் மற்றும் சிறுவர் நூல்களைக் கொண்டு சிறுவர்களுக்கான ‘மகிழ்வகம்’ ஒன்றை பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளோம்.