பாலு மகேந்திரா நூலகம்
ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்புடனான திரைப்பட நூலகம் மற்றும் கற்கை வள நிலையம் ‘பாலு மகேந்திரா நூலகம்’ ஆகும்.
உலகில் பிரசித்தி பெற்ற திரைப்படக் கல்லூரிகள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இருநூற்றுக்கும் (200) அதிகமான திரைப்பட நூல்கள், இருநூற்றுக்கும் (200) அதிகமான ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்கள் மற்றும் பத்தாயிரத்திற்கும் (10000) அதிகமான மூலவடிவங்களில் காணப்படும் (Original) உலகத் திரைப்பட DVD மற்றும் Blu-ray களைக் கொண்டு இந்நூலகம் கிளிநொச்சியில் இயங்கி வருகிறது.
எமது நூலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றை ஆர்வமுள்ள அனைவரும் முற்பதிவு செய்து எமது அலுவலக நேரத்தில் அவற்றை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.
அதேநேரம், வெளி மாவட்டங்களில் வசிப்பவர்களும் எமது நூலகச் செயற்பாடுகளை இலகுவில் அனுபவிக்கும் பொருட்டு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒருகட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறைக்கு 1400 எண்மின் காணொளி வட்டுகளை (DVD) கையளித்துள்ளோம்.
இவை தவிர ஒருவருட முழுநேர இலவசத் திரைப்படக் கற்கை நெறியை மேற்கொண்டு வருகிறோம்.
எமது கிளைகள் மற்றும் பங்காளர்கள்
கிளிநொச்சி - 44000
Phone No: 212282108
balumahendralibrary.org[@]gmail.com
யாழ்ப்பாணம் - 40000
Phone No: 212218101