பதர் பாஞ்சாலி
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “பதர் பாஞ்சாலி” [17].
சத்யஜித் ரே இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய வங்காள மொழித் திரைப்படம் பதர் பஞ்சாலி (Pather Panchali) ஆகும்.
சத்யஜித் ரேயின் முதல் திரைப்படமான இது, 1929 இல் வெளிவந்த பிபுதிபூஷன் பாண்டியோபாத்யாய் (Bibhutibhushan Bandyopadhyay) என்பவரின் பதர் பாஞ்சாலி என்ற வங்காள மொழி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம், அப்பு மற்றும் அவனது மூத்த சகோதரி துர்கா ஆகியோரின் குழந்தைப் பருவத்தையும், கிராமப்புறத்தில் வாழும் அவர்களின் ஏழ்மை வாழ்க்கையையும் சித்தரிக்கிறது.
இயக்குனர் முதற்கொண்டு புதுமுக கலஞர்களின் சிறந்த படைப்பாக வெளிவந்த இந்தத் திரைப்படம், 1955 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான இந்தியாவின் தேசிய திரைப்பட விருது மற்றும் 1956 இல் Cannes திரைப்பட விழாவில் சிறந்த மனித ஆவண (Best Human Document) விருது என்பவற்றுடன் பல விருதுகளையும் வென்றது.
பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.
இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.
அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.
இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்