குண்டுகளின் கீழ்
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “குண்டுகளின் கீழ்” (Under The Bombs).
கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு பாலு மகேந்திரா நூலகத்தின் ஒரு வருட முழுநேர முதுநிலைக் கற்கைநெறியினைத் தொடரும் மாணவர்களுக்கு மாத்திரமே இவ்வாரத் திரையிடலில் பங்குபற்றுவதற்கான OTT(Netflix) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 இடர்காலம் முடியும் வரை எம்மிடம் உள்ள OTT தளங்களில் காணப்படும் திரைப்படங்களை மாத்திரமே திரையிடத் தீர்மானித்துள்ளோம்.
பிலிப் அராக்டிங்கி ( Philippe Aractingi ) இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான லெபனான் நாட்டுத் திரைப்படம் “குண்டுகளின் கீழ்” ஆகும்.
இத்திரைப்படம் 2006 இல் லெபனானின் மீது நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தனது மகன் மற்றும் சகோதரியைத் தேடி போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானிற்கு வரும் தாய் ஒருவர், ஒரு வாகன ஓட்டுனரை சம்மதிக்கவைத்து அவர்களைத் தேடும் ஆபத்தான பயணத்தைப் பற்றியது.
இந்த படம் 2006 லெபனான் போரின் முடிவில் லெபனானில் படமாக்கப்பட்டது.
பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றமை நீங்கள் அறிந்ததே. கொவிட்-19 இடர்காலம் முடிந்ததும் மீண்டும் வழமைபோல் திரையிடல்கள் எமது நூலகத்தில் இடம்பெறும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
28.07.2021