ஒட்டுண்ணி [Parasite]

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “ஒட்டுண்ணி” [01].


Bong Joon ho என்பவரின் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான தென்கொரியத் திரைப்படமே ஒட்டுண்ணி (Parasite) ஆகும்.


வர்க்க வேறுபாடு மற்றும் பேராசையால் மனித வாழ்வியலில் ஏற்படும் விளைவுகளை கதைக்களமாகக் கொண்டமைந்த திரைப்படத்தில், பண வசதிபடைத்த பார்க் குடும்பத்தை ஒட்டி வாழ ஆசைப்படும் கிம் என்ற ஏழைக்குடும்பத்தால், அவ்விரு குடும்பத்தினரது வாழ்வியலில் ஏற்படும் பிரச்சினைகளை காட்சிகளாக்கி அமெரிக்காவின் அப்போதைய நிலமையைப் பேசியுள்ள திரைப்படம் இதுவாகும்.


இந்தத் திரைப்படம், 2019 மே 21 அன்று Cannes திரைப்பட விழாவில் முதன்முதலாக திரையிடப்பட்டதுடன், Cannes திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான Palme d'Or விருதினையும் வென்றுள்ளது.


அதேபோன்று,, 92 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த திரைப்படம் (Best Picture), சிறந்த இயக்குனர் (Best Director), சிறந்த அசல் திரைக்கதை (Best Original Screenplay) மற்றும் சிறந்த சர்வதேசத் திரைப்படம் (Best International Feature Film) ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.


இவ்வாறாக, Palme d'Or மற்றும் Oscar விருது வென்ற முதல் தென்கொரியத் திரைப்படமாக இந்தத் திரைப்படம் தடம் பதித்துள்ளதுடன், Oscar விருது வென்ற ஆங்கிலம் அல்லாத முதல் வேற்று மொழித் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.


இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.


அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.


அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.


இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.


பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்



இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event