The Imitation Game

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “The Imitation Game” [18].

கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு பாலு மகேந்திரா நூலகத்தின் ஒரு வருட முழுநேர முதுநிலைக் கற்கைநெறியினைத் தொடரும் மாணவர்களுக்கு மாத்திரமே இவ்வாரத் திரையிடலில் பங்குபற்றுவதற்கான OTT(Netflix) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 இடர்காலம் முடியும் வரை எம்மிடம் உள்ள OTT தளங்களில் காணப்படும் திரைப்படங்களை மாத்திரமே திரையிடத் தீர்மானித்துள்ளோம்.

மோர்டன் டைல்டம் (Morten Tyldum) இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படம் The Imitation Game ஆகும்.

இந்தத் திரைப்படம், இரண்டாம் உலகப் போரின் போது, ஆங்கில, கணித மேதை ஆலன் டூரிங் (Alan Turing) சக கணிதவியலாளர்களின் உதவியுடன் ஜெர்மன் எனிக்மா (Enigma) குறியீட்டை சிதைக்க முயற்சிப்பதை கதைக் கருவாக கொண்டமைந்துள்ளது.

Andrew Hodges எழுத்தில் 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த Alan Turing: The Enigma என்ற சுயசரிதை நூலினைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும்.

இது 87 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டதுடன், சிறந்த தழுவிய திரைக்கதைக்கான (Best Adapted Screenplay) விருதை வென்றது.

பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றமை நீங்கள் அறிந்ததே.. கொவிட்-19 இடர்காலம் முடிந்ததும் மீண்டும் வழமைபோல் திரையிடல்கள் எமது நூலகத்தில் இடம்பெறும்.

பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்

பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

18.06.2021

News & Event