Halima's Path
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Halima's Path” [12].
ஆர்சன் அன்டன் ஓஸ்டோஜிக் (Arsen Anton Ostojić) இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான வொஸ்னியன் திரைப்படம் Halima's Path ஆகும்.
1990 களில் வொஸ்னியப் போரின் போது இழந்த தனது மகனின் எலும்புகளை மீட்டெடுப்பதற்காக தனது பிரிந்த மருமகளைத் தேடிப்போகும் கலிமாவின் பயணமே இந்தத் திரைப்படமாகும்.
மேற்கு வொஸ்னியாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜாஹிதா மற்றும் முஹாரெம் பாஸ்லிக் என்ற குடும்பத்தினரின் வாழ்க்கைக் கதையால் ஈர்க்கப்பட்டு உருவாக்கம் பெற்ற திரைப்படம் இதுவாகும்.
இந்தத் திரைப்படம், 86 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த சவதேசத் திரைப்படத்திற்கான வொஸ்னியா நாட்டின் நுழைவாகத் தேர்வுசெய்யப்பட்டிருந்த போதிலும், பின்னர் இந்தத் திரைப்படம் பரிந்துரை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.
இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.
அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.
இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்