First They Killed My Father

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் ‘First They Killed My Father’.

First They Killed My Father என்பது ஏஞ்சலினா யூலி (Angelina Jolie) இயக்கியத்தில் 2017 ம் ஆண்டு வெளியான கம்போடிய-அமெரிக்க திரைப்படமாகும்.

இந்த படம் 2017 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் முதல் தடவை திரையிடப்பட்டது.

கம்போடியாவில் 1975 ஆம் ஆண்டின் பின்னணியில், 7 வயது சிறுமி, குழந்தை சிப்பாயாக பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுவதுடன், அவரது உடன்பிறப்புகள் கெமர் ரூஜ் ஆட்சியின் போது தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டமையை மையமாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு பாலு மகேந்திரா நூலகத்தின் ஒரு வருட முழுநேர முதுநிலைக் கற்கைநெறியினைத் தொடரும் மாணவர்களுக்கு மாத்திரமே இவ்வாரத் திரையிடலில் பங்குபற்றுவதற்கான OTT(Netflix) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 இடர்காலம் முடியும் வரை எம்மிடம் உள்ள OTT தளங்களில் காணப்படும் திரைப்படங்களை மாத்திரமே திரையிடத் தீர்மானித்துள்ளோம்.


பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றமை நீங்கள் அறிந்ததே. கொவிட்-19 இடர்காலம் முடிந்ததும் மீண்டும் வழமைபோல் திரையிடல்கள் எமது நூலகத்தில் இடம்பெறும்.

பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
23.09.2021

News & Event