Cast Away
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Cast Away” [03].
ரொபேர்ட் ஜெமெக்கிஸ் (Robert Zemeckis) அவர்களின் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கன் திரைப்படம் இதுவாகும்.
ஃபெடெக்ஸ் நிறுவன நிர்வாகியான ரொம் ஹாங்க்ஸ் (Tom Hanks) விமானப் பயணத்தின் போது விபத்துக்குள்ளாகி மக்களேயற்ற தீவொன்றில் மாட்டிக்கொள்கின்றார். அங்கிருந்து தப்பிப்பதற்கான அவரது உடலியல் மற்றும் மன ரீதியான போரட்டமே இந்தத் திரைப்படம் ஆகும்.
இந்தத் திரைப்படம், 73 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகர் (Best Actor) மற்றும் சிறந்த ஒலியமைப்பு (Best Sound) ஆகிய பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.
இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.
அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.
இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்