A Twelve-Year Night
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் ‘A Twelve-Year Night’.
A Twelve-Year Night என்பது ஆல்வாரோ ப்ரெச்னர்(Álvaro Brechner) இயக்கிய உருகுவே நாட்டு நாடகத் திரைப்படமாகும்.
இது 75 வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ தேர்வில் திரையிடப்பட்டதுடன், 91 வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான உருகுவே நுழைவாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த படம் 1960 மற்றும் 1970 களில் செயல்பட்ட இடதுசாரி நகர்ப்புற கெரில்லா குழுவான துபாமாரோஸின் உறுப்பினர்களின் 12 வருட சிறைவாசம் பற்றியது.
கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு பாலு மகேந்திரா நூலகத்தின் ஒரு வருட முழுநேர முதுநிலைக் கற்கைநெறியினைத் தொடரும் மாணவர்களுக்கு மாத்திரமே இவ்வாரத் திரையிடலில் பங்குபற்றுவதற்கான OTT(Netflix) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 இடர்காலம் முடியும் வரை எம்மிடம் உள்ள OTT தளங்களில் காணப்படும் திரைப்படங்களை மாத்திரமே திரையிடத் தீர்மானித்துள்ளோம்.
பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றமை நீங்கள் அறிந்ததே. கொவிட்-19 இடர்காலம் முடிந்ததும் மீண்டும் வழமைபோல் திரையிடல்கள் எமது நூலகத்தில் இடம்பெறும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
15.09.2021