7 Prisoners

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “7 Prisoners ” [42].

இது அலெக்சாண்டர் மொரொட்டோ (Alexandre Moratto ) இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேசில் நாட்டுத் திரைப்படமாகும்.

இத்திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் Sorriso Diverso Venezia விருதை வெளிநாட்டு மொழியில் சிறந்த திரைப்படம் பிரிவில் வென்றுள்ளது .

பொறியியலாளர் ஆக விரும்பிய 18 வயது நிரம்பிய மாதேஸ் (Mateus) தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக சம் பாவுலோ (São Paulo) எனும் நகரத்தில் அமைந்த குப்பை கொட்டும் இடத்தில் வேலை செய்து வரும் வேளையில், மனித கடத்தல் செய்து வரும் பயங்கரமான கும்பல் ஒன்றில் சிக்கி உயிரை காப்பாற்ற மனித நேயத்தை புறந்தள்ளி செயல்படும் கதையை அடிப்படையாகக்கொண்டு போர்த்துக்கீசிய மொழியில் இப்படம் உருவாக்கப்பட்டது.

பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச்வர சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெறும்.

இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.

அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.

அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.

இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.

பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
11.12.2021

News & Event