மாங்கல்யம் தந்து நீயே
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், எழுத்தாளர் ராணி சீதரனின் “மாங்கல்யம் தந்து நீயே”.
சிறுகதை, கவிதை, கட்டுரை என பல படைப்புக்களை எமக்களித்த ஈழத்தின் எழுத்தாளர் ராணி சீதரன் ஆவார். ‘கன்னியாதானம், தேன்சிட்டு, நடுகல், நிலவும் சுடும், புறங்கைச் சுமை, மாங்கல்யம் தந்து நீயே’ போன்றன இவரது எழுத்துக்களில் உருவான படைப்புகள் ஆகும்.
இவை தவிர, ‘இனியார் எமக்கு, சீருடை, பிரிவு தந்த துயரம்’ போன்ற சிறுகதைகள் இவரது எழுத்தில் உருவாகி அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்ற படைப்புகளாகும்.
இவ்வாறான பல படைப்புகளை தனது எழுத்துக்களில் எமக்களித்த ராணி சீதரன் அவர்கள், தனது ‘மாங்கல்யம் தந்து நீயே’ நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக இணைகின்றார்.
பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.
இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்