பங்கர்
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், வெற்றிச்செல்வியின் “பங்கர்”.
மன்னாரைச் சேர்ந்த வெற்றிச்செல்வி அவர்கள், சிறு வயது முதல் எழுத்துவதிலும் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டதன் பின்னர் வானொலிப் பிரதிகளை எழுதத் தொடங்கினார். அதே காலகட்டத்தில் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அவரது ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின.
போராட்டம் நிறைவடைந்து தடுப்பு முகாமில் இருந்த போதும் எழுத்தின் மீதான ஆர்வம் குறையாத இவர், தடுப்பிலிருந்தவாறே ‘ஈழப்போரின் இறுதி நாட்கள், போராளியின் காதலி’ போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
தொடர்ந்து, ‘இப்படிக்கு அக்கா, துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்’ என்ற கவிதைத் தொகுப்புகளையும், ‘காணமல் போனவனின் மனைவி, முடியாத ஏக்கங்கள்’ என்ற சிறுகதைகளையும், ‘வெண்ணிலா’ என்ற குறுநாவலையும், ‘போராளியின் காதலி’ என்ற நாவலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அவற்றுடன், ‘‘ஈழப்போரின் இறுதி நாட்கள், ஆறிபோன காயங்களின் வலி, குப்பி, வானம்பாடி 1 மற்றும் 2 ,பங்கர்’ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
இவ்வாறாக, தமிழ் மக்கள் அனுபவித்த தாங்கோணத்துயரைச் சொல்லும் படைப்புகளை தனது எழுத்துக்களில் எமக்களித்த படைப்பாளினி வெற்றிச்செல்வி தனது ‘பங்கர்’ நூல் பற்றிய கருத்துக்கள் மற்றும் அனுபவங்களுடன் பாலு மகேந்திரா நூலகத்தின் வாசிப்பும் உரையாடலும் பகுதியூடாக இணைந்துகொள்ளவுள்ளார்.
இந்த நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக இணைகின்றார் நூலின் ஆசிரியர் வெற்றிச்செல்வி.
பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.
இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்