செல்லமுத்து

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல் “செல்லமுத்து”.



இந்த நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக இணைந்து கொள்கின்றார் எழுத்தாளரும், நூலின் ஆசிரியருமான யோ.புரட்சி.



எழுத்தாளர் யோ.புரட்சி அவர்கள் கிளிநொச்சியினை பிறப்பிடமாக கொண்டவர். கவிதை, சிறுகதை, நாவல் என்று ஈழ இலக்கியத்தில் தன்னை நிலை நிறுத்தியவர். இவரது ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் நூலில் 32 நாடுகளை சேர்ந்த 1098 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இவரது எழுத்தில் இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய், ஆஷா நாயும் அவளும், எதிர் வீட்டு நாயும் என் ஏழை நாயும் , ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் , செல்லமுத்து போன்ற நூல்கள் வெளிவந்துள்ளது.

இணைய வாயிலாக இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ZOOM செயலி ஊடாக கலந்து கொள்ள முடியும்.


கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக விண்ணப்பித்து, உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெற்றும்.

வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்

பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

05.08.2021

News & Event