எல்லை கடத்தல்
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், கவிஞர் ஔவையின் “எல்லை கடத்தல்”.
ஈழத்து நவீன கவிதைகளின் முன்னோடி மஹாகவியின் மகளான ஔவை, நவீன தமிழ்க் கவிஞர்களில் தவிர்க்கமுடியாத ஒருவராவார். 1980 களில் ஈழத்தின் கவிதை துறைக்குள் காலடியெடுத்து வைத்த இவர், ‘பெண்’ பற்றிய மரபார்ந்த சிந்தனையை உடைத்து, புதிய நோக்கில் சிந்திக்கும் கவிதைகளைப் படைத்தவர்களில் ஒருவர்.
இவர், பல கவிதைகளை எழுதியிருப்பினும், இவரது எழுத்தில் உருவான ‘எல்லை கடத்தல்’ மற்றும் ‘எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை’ ஆகிய கவிதை தொகுப்புகள் மாத்திரமே வெளிவந்துள்ளன.
அவற்றில், இன்றைய பாலு மகேந்திரா நூலகத்தின் வாசிப்பும் உரையாடலுக்குமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ‘எல்லை கடத்தல்’ கவிதை நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக இணைகின்றார் நூலின் ஆசிரியர் ஔவை.
பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.
இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்