இனிப்புக் கதைகள்

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல் “இனிப்புக் கதைகள்”.
2019 ஆம் ஆண்டு வெளியான இந்தக் கதைத் தொகுப்பானது த.அஜந்தகுமார் அவர்களின் இந்நூலில் எழுத்தாளர் அவரின் வாழ்வு அனுபவங்களைப் பேசுவனவாகவும் அவ் அனுபவங்களின் படிப்பினைகளை அலசுவதாகவும் தனது பார்வையில் எழுத்துக்களாக வடித்துள்ளார்.
இந்த நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக இணைந்து கொள்கின்றார் எழுத்தாளர் த.அஜந்தகுமார்.

இணைய வாயிலாக இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ZOOM செயலி ஊடாக கலந்து கொள்ள முடியும்.

கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக விண்ணப்பித்து, உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பாலு மகேந்திரா நூலகத்தின் வாசிப்பும் உரையாடலும் இணையவாயிலாக நடைபெற்றுவருகிறது.

வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
10.02.2021

News & Event