இதய ராகம்

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல் “இதய ராகம்”.

2021 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவலானது, தாயினதும் தந்தையினதும் காதல் தொடக்கம் அவர்களது மூத்த இரண்டு பிள்ளைகளின் காதல் என இரு தலைமுறையினரின் வாழ்க்கையைப் பேசுகிறது.

இந்த நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக இணைந்து கொள்கின்றார் எழுத்தாளரும், நூலின் ஆசிரியருமான சியாமளா யோகேஸ்வரன்.

இணைய வாயிலாக இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ZOOM செயலி ஊடாக கலந்து கொள்ள முடியும்.

கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக விண்ணப்பித்து, உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பாலு மகேந்திரா நூலகத்தின் வாசிப்பும் உரையாடலும் இணையவாயிலாக நடைபெற்றுவருகிறது.

வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
15.01.2021

News & Event