அப்பாக்களும் அம்மாக்களும்

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல் “அப்பாக்களும் அம்மாக்களும்”.
மகுடம் பதிப்பகத்தின் 26வது வெளியீடாக 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த சிறுகதைத் தொகுப்பானது 10 சிறுகதைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டதாக அமைகின்றது. கரவை மு.தயாளனின் மூன்றாவது சிறுகதைத்தொகுப்பாக வெளியாகி இருக்கும் இந்நூலில் எழுத்தாளர் தனது சொந்த வாழ்வில் சந்தித்த விடயங்களை எழுத்துக்களாக வடித்துள்ளார். இந்நூலில் காணப்படும் கதைகள் அனைத்தும் புலம்பெயர் தேசத்தில் ஈழத்தவர்களின் அனுபவங்களின் தொகுப்பாகவே அமைந்துள்ளன.
இன்னல் மிகுந்த சூழலில் அடுத்தவரின் பணத்தை சுரண்டும் மனிதர்களின் மனநிலை, புலம்பெயர் தேசத்து பெற்றோரின் வாழ்வியல், வயதான பெற்றோரிடம் கணக்கு பார்க்கும் பிள்ளைகளின் சுயநலம், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல், பெற்றோரின் வரட்டு கௌரவத்தால் அவதியுறும் பிள்ளைகள் இவ்வாறாக எழுத்துக்களுக்குள் மறைந்து கிடக்கும் விடயங்கள் விரிந்தே செல்கின்றன.
இந்த நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக இணைந்து கொள்கின்றார் எழுத்தாளர் கரவை மு.தயாளன்.

இணைய வாயிலாக இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ZOOM செயலி ஊடாக கலந்து கொள்ள முடியும்.

கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக விண்ணப்பித்து, உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பாலு மகேந்திரா நூலகத்தின் வாசிப்பும் உரையாடலும் இணையவாயிலாக நடைபெற்றுவருகிறது.

வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
27.01.2021

News & Event