Boyhood

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Boyhood”.

Boyhood என்பது ரிச்சர்ட் லிங்க்லேட்டரா(Richard Linklater) இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும்.

இத் திரைப்படம் 2014 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, 64 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான வெள்ளி கரடி விருதை வென்றது.

எம்ஜேவின் பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு, 12 வருடங்கள் அவனது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு பாலு மகேந்திரா நூலகத்தின் ஒரு வருட முழுநேர முதுநிலைக் கற்கைநெறியினைத் தொடரும் மாணவர்களுக்கு மாத்திரமே இவ்வாரத் திரையிடலில் பங்குபற்றுவதற்கான OTT(Netflix) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 இடர்காலம் முடியும் வரை எம்மிடம் உள்ள OTT தளங்களில் காணப்படும் திரைப்படங்களை மாத்திரமே திரையிடத் தீர்மானித்துள்ளோம்.


பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றமை நீங்கள் அறிந்ததே. கொவிட்-19 இடர்காலம் முடிந்ததும் மீண்டும் வழமைபோல் திரையிடல்கள் எமது நூலகத்தில் இடம்பெறும்.

பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
20.10.2021

News & Event