ஆவணப்பட ஒளி அமைப்பு தொடர்பான கருத்தரங்கு - Julia Schlingmann
பாலு மகேந்திரா நூலகத்தால் நடாத்தப்படும் வாராந்த திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் ஜேர்மனிய ஒளிப்பதிவாளர் ஜூலியா ஷ்லிங்மேன் (Julia Schlingmann) அவர்கள் ஆவணப்பட ஒளி அமைப்பு தொடர்பான கருத்தரங்கை மேற்கொள்ளவுள்ளார்.
ஜூலியா ஷ்லிங்மேன் (Julia Schlingmann) அவர்கள் 2013 முதல் ஜேர்மனியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். இவர் பல வெற்றிகரமான குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார். The Blue Way, Holo One, Bella Palanka, War Of Lies, Not In My Backyard ஆகியன சர்வதேச விருதுகள் வென்ற இவரது முக்கிய படைப்புகளாகும். இவரது "Women behind the camera" என்ற கருத்தரங்கு ஜேர்மனிய "cine arte" இதழில் நேர்காணல் வடிவில் வெளியாகியுள்ளது.
ZOOM செயலி ஊடாக நடைபெறும் இக்கலந்துரையாடலில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இந்த திரைப்படப் பயிற்சிப்பட்டறை இணையவாயிலாக நடைபெறும்.
இதில், வாராந்தம் திரைத்துறை ஆளுமைகள் கலந்துகொண்டு உங்கள் திரைத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.
திரைத்துறை ஆர்வமுள்ளவர்கள் எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக விண்ணப்பித்து, உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இவ்வண்ணம்,
பாலு மகேந்திரா நூலகம்.
21.09.2021