ஈழன் இளங்கோ அவர்களின் திரைப்பயணம்
பாலு மகேந்திரா நூலகத்தால் நடாத்தப்படும் வாராந்த திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் புலம்பெயர் ஈழத்தமிழ் திரைப்பட இயக்குனர் ஈழன் இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு திரைப்படத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார்.
ZOOM செயலி ஊடாக நடைபெறும் இக்கலந்துரையாடலில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இந்த திரைப்படப் பயிற்சிப்பட்டறை இணையவாயிலாக நடைபெறும்.
இதில், வாராந்தம் சர்வதேசப் புகழ்பெற்ற திரைத்துறை ஆளுமைகள் கலந்துகொண்டு உங்கள் திரைத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.
திரைத்துறை ஆர்வமுள்ளவர்கள் எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக விண்ணப்பித்து, உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இவ்வண்ணம்,
பாலு மகேந்திரா நூலகம்