வேடத்தனம்
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், கவிஞரும், ஓவியரும், எழுத்தாளருமான மல்லிகை சி.குமாரின் “வேடத்தனம்”.
தலவாக்கலை பெரிய மல்லிகைப்பூ தோட்டத்தில் வசித்துவந்த சி.குமார், மல்லிகை சி.குமார் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதிய இவர் ஓவியராகவும் அறியப்படுகின்றார்.
‘வேடத்தனம், மனுஷியம்’ போன்ற சிறுகதைகள் மற்றும் ‘மாடும் வீடும்’ என்ற கவிதைத் தொகுதி என்பன இவரது எழுத்தில் வெளிவந்து அதிகம் பேசப்பட்ட படைப்புகளாகும்.
மலையகத்தின் எழுத்தாளராக மக்களைக் கவர்ந்த இவர், தனது ‘வேடத்தனம்’ என்ற நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதற்காக வாசிப்பும் உரையாடலும் பகுதியூடாக இணைந்துகொள்கின்றார்.
பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.
இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்