வாழத் துடிக்கும் வன்னி
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், பி.மாணிக்கவாசகத்தின் “வாழத் துடிக்கும் வன்னி”.
நுவரெலியாவைச் சேர்ந்த பொன்னையா மாணிக்கவாசகம், நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றி வருபவர். லண்டன் பிபிசி, ஏசியா கோலிங் , free speech radio news போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களின் செய்தி முகவரான இவர், யுத்த காலத்தில் தமிழ் மக்களின் அவலங்களை சர்வதேச அரங்குக்கு கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியவர்களுள் ஒருவர்.
அத்துடன், யுத்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவதிலும் இவரது பங்கு முக்கியமானது. இவர், தனது ஊடகப் பணிக்கால கட்டுரைகளைத் தொகுத்து 'நம்பிக்கையோடு நிம்மதியை நாடும் யாழ்ப்பாணம், கால அதிர்வுகள், வாழத்துடிக்கும் வன்னி' போன்ற நூல்களாக வெளியிட்டுள்ளார்.
சிறந்த ஊடகப் பணிக்காக, கலாசார அமைச்சின் கலாபூஷணம் விருதுடன், வாழ்நாள் ஊடகப்பணி சாதனையாளர் விருதையும் பெற்றுள்ள பி.மாணிக்கவாசகம் அவர்கள், தனது ‘வாழத்துடிக்கும் வன்னி’ என்ற நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக பாலு மகேந்திரா நூலகத்துடன் இணைந்துகொள்கின்றார்.
பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.
இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்