சுமையின் பங்காளிகள்

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல் “சுமையின் பங்காளிகள்”.

இந்த நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக இணைந்து கொள்கின்றார் எழுத்தாளரும், நூலின் ஆசிரியருமான முருகபூபதி.

இணைய வாயிலாக இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ZOOM செயலி ஊடாக கலந்து கொள்ள முடியும்.

கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக விண்ணப்பித்து, உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெற்றுவருகின்றமை நீங்கள் அறிந்ததே. கொவிட்-19 நிலைமை காரணமாக இவ்வார வாசிப்பும் உரையாடலை இணைய வாயிலாக மாத்திரம் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். கொவிட்-19 இடர்காலம் முடிந்ததும் மீண்டும் வழமைபோல் வாசிப்பும் உரையாடலும் எமது நூலகத்திலும் இணையவாயிலாகவும் இடம்பெறும்.

வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
30.09.2021

News & Event