குழந்தை ஒரு தெய்வம்

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், எழுத்தாளர் காவலூர் ராசதுரையின் “குழந்தை ஒரு தெய்வம்”.


ஊர்காவற்துறையைச் சேர்ந்த காவலூர் ராசதுரை (மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை), ஆரம்ப நாட்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றினார். ஒலிபரப்புத்துறைக்குள் பணியாற்றினாலும் எழுத்தின் மீதான அவரது ஆர்வத்தினால், ‘சிறுகதை, நாவல், நாடகம், விமர்சனம், திரைக்கதை’ என பல படைப்புகளையும் எழுதியுள்ளார்.


‘குழுந்தை ஒரு தெய்வம், வீடு யாருக்கு, ஒரு வகை உறவு, தேவ கிருபையை முன்னிட்டு வாழும்’ போன்றன இவரது எழுத்துக்களில் உருவான படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இவற்றில், ‘தேவ கிருபையை முன்னிட்டு வாழும்’ என்ற சிறுகதை, இலங்கை தமிழ் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளமையானது, இவரது எழுத்துக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாகக் கருதப்படுகின்றது.


அதேபோல், 1977 இல் வெளியான ஈழத்துத் திரைப்படமான “பொன்மணி” என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இவர், ஈழத்தின் நாடகம் மற்றும் திரைப்படத்துறையிலும் முக்கிய இடம் பிடித்துள்ளார்.


இவ்வாறான பல்துறைக் கலைஞனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட காவலூர் ராசதுரையின் ‘குழந்த ஒரு தெய்வம்’ என்ற நூல் இவ்வாரம் வாசிப்பும் உரையாடலுக்குமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.


இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.


இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.


வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்



இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event