கருணை நதி

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், மிதயா கானவியின் “கருணை நதி”.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மிதயா கானவி அவர்கள், பாடசாலைக் காலத்திலேயே பத்திரிகைகளில் கவிதைகள் எழுதத் தொடங்கியுள்ளார். அதுமாத்திரமன்றி, மருத்துவப் போராளியாக பாணியாற்றிய இவர், மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகளையும் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார்.

போர்க்கால மக்கள் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் இவரது படைப்புகளில் ‘மருத்துவ மடியில் மற்றும் கருணை நதி’ ஆகியன பலராலும் பேசப்பட்ட படைப்புகளாகும்.

இவற்றில், தனது ‘கருணைநதி’ என்ற நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பாலு மகேந்திரா நூலகத்தின் வாசிப்பும் உரையாடலும் பகுதியின் ஊடாக பகிர்ந்துகொள்ள இணைகின்றார் நூலின் ஆசிரியர் மிதயா கானவி.

பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.

இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.

இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்


இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event