ஒன்பதாவது குரல்
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், தாட்சாயிணியின் “ஒன்பதாவது குரல்”.
சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த பிரேமினி சபாரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட தாட்சாயிணி அவர்கள், சிறு வயது முதலே எழுத்தில் ஆர்வம் கொண்டவர். சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், நாவல், அறிவியல் புனைகதை போன்றவற்றில் ஆர்வமுடைய இவர், 2000 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடாத்திய பவள விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
‘கடவுளோடு பேசுதல்’ என்ற ஆன்மீக கட்டுரையுடன், ‘மரணமும் சில மனிதர்களும், இளவேனில் மீண்டும் வரும், தூரப் போகும் நாரைகள், அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும், ஒன்பதாவது குரல்’ போன்ற சிறுகதைத் தொகுதிகளும் இவரது எழுத்தில் வெளிவந்த படைப்புகளாகும். இதில், ‘இளவேனில் மீண்டும் வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு 2007 ஆம் ஆண்டில் வட மாகாணத்தின் சிறந்த நூலுக்கான விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, பல படைப்புகளை எமக்களித்த படைப்பாளினியான தாட்சாயிணி அவர்கள், இன்றைய வாசிப்பும் உரையாடலும் பகுதியின் ஊடாகத் தனது ‘ஒன்பதாவது குரல்’ நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதற்காக இணைகின்றார்.
பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.
இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்