Wadjda

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Wadjda”.

கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு பாலு மகேந்திரா நூலகத்தின் ஒரு வருட முழுநேர முதுநிலைக் கற்கைநெறியினைத் தொடரும் மாணவர்களுக்கு மாத்திரமே இவ்வாரத் திரையிடலில் பங்குபற்றுவதற்கான OTT(Netflix) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 இடர்காலம் முடியும் வரை எம்மிடம் உள்ள OTT தளங்களில் காணப்படும் திரைப்படங்களை மாத்திரமே திரையிடத் தீர்மானித்துள்ளோம்.

ஹைஃபா அல்-மன்சூர் (Haifaa al-Mansour) இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான சவுதி அரேபியா நாட்டுத் திரைப்படம் “Wadjda” ஆகும்.

இத்திரைப்படம், ஒரு சவுதி பெண் தனக்கு விருப்பமான பச்சை நிற மிதிவண்டியை வாங்குவதற்கு, தன்னிடமுள்ள நிதியை விடவும் தேவையான மீதமுள்ள நிதியை திரட்டுவதற்காக பள்ளியின் குரான் பாராயணப் போட்டியில் கையெழுத்திடுவதை கதைக்கருவாகக் கொண்டது.

இந்த படம் 86 ஆவது அகாடமி விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான சவுதி அரேபிய நுழைவாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன்படி, முதல் முறையாக சவுதி அரேபியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு சமர்ப்பிக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். இது 2014 BAFTA விருது விழாவிலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றமை நீங்கள் அறிந்ததே. கொவிட்-19 இடர்காலம் முடிந்ததும் மீண்டும் வழமைபோல் திரையிடல்கள் எமது நூலகத்தில் இடம்பெறும்.

பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்

பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

15.07.2021

News & Event