Tsotsi

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Tsotsi” [46].

இது கவின் ஹூட் (Gavin Hood) இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தென்னாபிரிக்கத் திரைப்படமாகும். இத்திரைப்படம் அதோல் புகாட் (Athol Fugard) எழுதிய “Tsotsi” என்ற நவாலை அடிப்படையாகக் கொண்டது.

“Tsotsi” என்ற வாலிபர் ஜொகனர்ஸ்பேர்க்கில் வன்முறைக் கும்பல்களுடன் இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார். ஒருமுறை கார் ஒன்றைக் கடத்தும் போது, காரின் பின்னிருக்கையில் ஒரு குழந்தை இருக்கிறது. உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத இவர், அக்குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்து வருவதால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான் இந்த திரைப்படத்தின் கதையாக அமைகின்றது.

பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 4 மணிமுதல் 8 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெறும்.

இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.

அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.

அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.

இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.

பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்


இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
11.01.2022

News & Event