Ryan's Daughter
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Ryan's Daughter” [15].
டேவிட் லீன் (David Lean) இயக்கத்தில் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த பிரிட்டிஷ் திரைப்படம் Ryan's Daughter ஆகும்.
1916 இல் Easter Rising அடுத்து அமைக்கப்பட்ட, ஒரு சிறிய ஐரிஷ் கிராமத்தில் வாழும் திருமணமான பெண் ஒருவர், முதலாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அதிகாரி ஒருவருடன் உறவு வைத்துக்கொள்வதைக் கதையாகக் கொண்டமைந்த திரைப்படம் இதுவாகும்.
1857 இல் வெளியான குஸ்டாவ் ஃப்ளூபர்ட் (Gustave Flauber) அவர்களின் Madame Bovary என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும்.
இந்தத் திரைப்படம் வெளியான காலப்பகுதியில் அதிகளவு விமர்சனங்களுக்கு உட்பட்டாலும், 1970 இல் அதிகம் வணிக ரீதியாக வெற்றியடைந்த திரைப்படங்களில் இதுவுமொன்று.
அத்துடன், இந்தத் திரைப்படம் 43 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த துணை நடிகர் (Best Supporting Actor) மற்றும் சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography) ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.
இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.
அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.
இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்