Amadeus

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Amadeus” [04].


மிலோஸ் ஃபோர்மன் (Miloš Forman) என்பவரின் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கன் திரைப்படம் Amadeus ஆகும்.


1979 ஆம் ஆண்டில் பீட்டர் ஷாஃபர் (Peter Shaffer) அவர்களின் தயாரிப்பில் உருவான Amadeus என்ற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், இசையமைப்பாளரான அன்டோனியோ சலியெரி என்பவர், தனது சமகாலத்தில் தலைசிறந்த இசையமைப்பாளராக விளங்கிய மொஷாட்டின் வாழ்க்கைப் பயணம் பற்றிக் கூறுவதைக் கதைக்களமாகக் கொண்டமைந்துள்ளதைக் காணலாம்.


மேலும், இந்தத் திரைபடமானது, 56 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த திரைப்படம் (Best Picture), சிறந்த இயக்குனர் (Best Director), சிறந்த நடிகர் (Best Actor in a Leading Role), சிறந்த தழுவல் திரைக்கதை (Best Adapted Screenplay), சிறந்த கலை இயக்கம் (Best Art Direction), சிறந்த ஆடை வடிவமைப்பு (Best Costume Design), சிறந்த ஒப்பனை (Best Makeup), மற்றும் சிறந்த ஒலியமைப்பு (Best Sound) ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.


அத்துடன், சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography), மற்றும் சிறந்த படத்தொகுப்பு (Best Film Editing) ஆகிய பிரிவுகளில் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.


இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.


அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.


அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.


இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.


பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்


இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event