மின்மினிப் பூச்சிகளின் கல்லறை [Grave of fireflies]

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “மின்மினிப்பூச்சிகளின் கல்லறை” [02].


1988 இல் ஜப்பானில் வெளியான போர்ச் சூழலைப் பின்னணியாய்க் கொண்டமைந்த அனிமேசன் திரைப்படமே மின்மினிப்பூச்சிகளின் கல்லறை (Grave of fireflies) ஆகும்.


ஜப்பானிய இயக்குனரான Isao Takahata வின் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம், 1967 இல் அகியுகி நொசாகா (Akiyuki Nosaka) என்பவரால் எழுதப்பட்ட Grave of fireflies என்ற சுயசரிதை சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானில் உயிர்வாழ்வதற்காகப் போராடும் ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரியின் போராட்டம் பற்றிப் பேசும் கதைக்களத்தைக் கொண்டமைந்த Grave of fireflies திரைப்படமானது, போரியல் சார்ந்த திரைப்படங்களில் அதிகம் பேசப்பட்ட திரைப்படமாக விளங்குவதுடன், ஜப்பானில் இருந்து வெளியான அனிமேசன் திரைப்படங்களில் சிறந்த திரைப்படமாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.


இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.


அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.


அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.


இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.


பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்


இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event