நான் என் உடலை இழந்தேன்

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “நான் என் உடலை இழந்தேன்” (I Lost My Body).

கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு பாலு மகேந்திரா நூலகத்தின் ஒரு வருட முழுநேர முதுநிலைக் கற்கைநெறியினைத் தொடரும் மாணவர்களுக்கு மாத்திரமே இவ்வாரத் திரையிடலில் பங்குபற்றுவதற்கான OTT(Netflix) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 இடர்காலம் முடியும் வரை எம்மிடம் உள்ள OTT தளங்களில் காணப்படும் திரைப்படங்களை மாத்திரமே திரையிடத் தீர்மானித்துள்ளோம்.

ஜெரமி கிளாபின் (Jérémy Clapin ) இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான பிரான்ஸ் நாட்டு அனிமேஷன் திரைப்படம் “I Lost My Body” ஆகும்.

இத்திரைப்படம் கேப்ரியல் என்ற பெண் மீது காதல் கொண்ட இளைஞனின் கதையையும், நகரத்தின் மற்றொரு பகுதியில் துண்டிக்கப்பட்ட கை ஒன்று ஆய்வகத்திலிருந்து தப்பித்து, அதன் உடலை மீண்டும் கண்டுபிடிக்க போராடுவதையும் கதைக்கருவாகக் கொண்டது.

இப்படம் 2019 கேன்ஸ் திரைப்பட விழாவில் International Critics' Week பகுதியில் திரையிடப்பட்டதுடன், அங்கு Nespresso விருதை வென்ற முதல் அனிமேஷன் திரைப்படமாக வரலாற்றில் தடம் பதித்தது. அத்துடன் 92 ஆவது ஒஸ்கர் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றமை நீங்கள் அறிந்ததே. கொவிட்-19 இடர்காலம் முடிந்ததும் மீண்டும் வழமைபோல் திரையிடல்கள் எமது நூலகத்தில் இடம்பெறும்.

பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்


இவ்வண்ணம்

பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

08.07.2021

News & Event