ஒரு மஞ்சள் பறவை

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் ‘ஒரு மஞ்சள் பறவை’.

கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு பாலு மகேந்திரா நூலகத்தின் ஒரு வருட முழுநேர முதுநிலைக் கற்கைநெறியினைத் தொடரும் மாணவர்களுக்கு மாத்திரமே இவ்வாரத் திரையிடலில் பங்குபற்றுவதற்கான OTT(Netflix) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 இடர்காலம் முடியும் வரை எம்மிடம் உள்ள OTT தளங்களில் காணப்படும் திரைப்படங்களை மாத்திரமே திரையிடத் தீர்மானித்துள்ளோம்.

கே.ராஜகோபால் (K. Rajagopal) இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான சிங்கப்பூர்-பிரெஞ்சு நாடகத் திரைப்படம் “ஒரு மஞ்சள் பறவை” ஆகும்.

இத்திரைப்படம் ‘சட்டவிரோத கடத்தல் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட சிங்கப்பூர்-இந்திய மனிதரான சிவா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் தனது முன்னாள் மனைவி மற்றும் மகளை கண்டுபிடிப்பதற்கான தேடலைத் தொடங்குகிறார். அவர் ஒரு சட்டவிரோத சீன விபச்சாரியின் நிறுவனத்தில் ஆறுதல் மற்றும் நம்பிக்கையை கண்டடைவதுடன் அவர் தனது குடும்பத்தைப் பற்றி தாங்க முடியாத உண்மையை எதிர்கொள்கிறார். அவர் தன்னை குற்ற உணர்விலிருந்து மீட்டுக்கொள்ள எவ்வளவு தூரம் செல்கிறார்’ என்பதை கதைக்கருவாகக் கொண்டது.

இது 2016 கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்வதேச விமர்சகர்களின் வார பிரிவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றமை நீங்கள் அறிந்ததே. கொவிட்-19 இடர்காலம் முடிந்ததும் மீண்டும் வழமைபோல் திரையிடல்கள் எமது நூலகத்தில் இடம்பெறும்.

பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்

இவ்வண்ணம்

பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

22.07.2021

News & Event