உங்கள் வரவு நல்வரவாகட்டும்



பாலு மகேந்திரா நூலகம்

பாலு மகேந்திரா நூலகம்

ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு ‘பாலு மகேந்திரா நூலகம்’ ஆகும்.

முதற்கட்டமாக உலகில் பிரசித்தி பெற்ற திரைப்படக் கல்லூரிகள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இருநூற்றுக்கும் (200) அதிகமான திரைப்பட நூல்கள், ஐந்நூற்றுக்கும் (500) அதிகமான ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்கள் மற்றும் பத்தாயிரத்திற்கும் (10000) மேற்பட்ட மூலவடிவங்களில் காணப்படும் (Original) உலகத் திரைப்பட DVD மற்றும் Blu-ray களைக் கொண்டு இந்நூலகம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எமது நூலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றை ஆர்வமுள்ள அனைவரும் முற்பதிவு செய்து எமது அலுவலக நேரத்தில் அவற்றை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.

அதேநேரம், வெளி மாவட்டங்களில் வசிப்பவர்களும் எமது நூலகச் செயற்பாடுகளை இலகுவில் அனுபவிக்கும் பொருட்டு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் முதற்கட்டமாக நடமாடும் நூலக செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

தொடர்புகளுக்கு
  • திரைப்படங்கள் 12883
  • புத்தகங்கள் 388
  • இதழ்கள் 0
  • ஒலி நூல்கள் 0

பாலு மகேந்திரா நூலகத்தின் சேவைகள்

எமது சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமானவை

  • திரைப்படப் பட்டறைகள்

    திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளை தனித்தும் பிற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும் இலவசமாக நடாத்துதல்.

  • முதுநிலைப் பயிற்சிகள்

    திரைப்படப் பட்டப் படிப்புகளை தனித்தும் பிற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும் இலவசமாக நடாத்துதல்.

  • திரைப்படத் திரையிடல்

    மக்களிடையே திரைப்பட ரசனையை மேம்படுத்தும் நோக்கில், எமது தலைமைக் காரியாலயத்திலும், தன்னார்வ திரை இரசனை இயக்கங்கள் ஊடாகவும், உலகத்திரைப்படங்களைத் திரையிட்டு, அதுசார்ந்த விவாதங்களை நிகழ்த்துதல்.

  • திரை இரசனை இயக்கங்கள்

    புத்தகங்கள், எண்மின் காணொளி வெட்டு (DVD) மற்றும் திரைப்படத் திரையிடலுக்குத் தேவையான உபகரணங்களை இரவல் வழங்குதல்.

  • திரைத்துறைக் கண்காட்சிகள்

    திரைப்படங்கள், திரைப்படத்துறை சார்ந்த வரலாறுகள், மற்றும் திரைப்படத்துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட கண்காட்சிகளை நடாத்துதல்.

  • திரைப்பட முகாம்கள்

    நகரங்களில் இருந்து கிராமப்புறங்கள் வரை நடைபெறும் பிரசித்தமான திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நிகழ்வுகளிலும், கடற்கரைகள் மற்றும் பிற சாத்தியப்படக்கூடிய வெளியிடங்களிலும் முகாம்களை அமைத்து சர்வதேசத் திரைப்படங்களை நாள் முழுவதும் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.

  • கணினி மற்றும் இணைய வசதி

    எமது உறுப்பினர்கள் மட்டுமல்லாது பிற மாணவர்களும் தமது கல்வித் தேவைக்காக கணினி, நகல் எடுத்தல் மற்றும் இணையத் தேவைகளை எமது தலமை நூலகத்தில் முற்றிலும் இலவசமாகப் பூர்த்தி செய்துகொள்வதற்கான ஒழுங்குபடுத்தல்களை செய்துகொடுத்தல்.

  • சந்திப்பறைகள்

    திரைப்படத் துறைசார் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு போன்றவற்றிற்கான இட வசதிகளை இலவசமாக வழங்குதல்.

  • OTT

    எமது தலைமை நூலகத்தில் Amazon Prime, MUBI, Netflix போன்ற, தேவைக்கேற்ப பாவிக்கும் திரைப்படத் தளங்களைப் (OTT or VOD) பயன்படுத்தி இலவசமாகத் திரைப்படங்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியளித்தல்.

  • திரைப்படங்களுக்கான துணைத்தலைப்புகள்

    சிறுவர் திரைப்படங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற வேற்று மொழித் திரைப்படங்களுக்கு தமிழில் துணைத் தலைப்புகளை உருவாக்குதல்.

  • ஒலி நூல்கள்

    வேற்று மொழி நூல்களை, வெளியீட்டாளர்களிடம் அனுமதி பெற்று மொழிபெயர்த்தல் மற்றும் ஒலி நூல்களை உருவாக்குதல்.

  • சிறுவர் சினிமா

    எமது தலைமைக் காரியாலயத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர் திரைப்படங்கள் மற்றும் சிறுவர் நூல்களைக் கொண்டு சிறுவர்களுக்கான ‘மகிழ்வகம்’ ஒன்றை பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளோம்.