ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்புடனான திரைப்பட நூலகம் மற்றும் கற்கை வள நிலையம் ‘பாலு மகேந்திரா நூலகம்’ ஆகும்.
உலகில் பிரசித்தி பெற்ற திரைப்படக் கல்லூரிகள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இருநூற்றுக்கும் (200) அதிகமான திரைப்பட நூல்கள், இருநூற்றுக்கும் (200) அதிகமான ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்கள் மற்றும் பத்தாயிரத்திற்கும் (10000) அதிகமான மூலவடிவங்களில் காணப்படும் (Original) உலகத் திரைப்பட DVD மற்றும் Blu-ray களைக் கொண்டு இந்நூலகம் கிளிநொச்சியில் இயங்கி வருகிறது.
எமது நூலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றை ஆர்வமுள்ள அனைவரும் முற்பதிவு செய்து எமது அலுவலக நேரத்தில் அவற்றை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.
அதேநேரம், வெளி மாவட்டங்களில் வசிப்பவர்களும் எமது நூலகச் செயற்பாடுகளை இலகுவில் அனுபவிக்கும் பொருட்டு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒருகட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறைக்கு 1400 எண்மின் காணொளி வட்டுகளை (DVD) கையளித்துள்ளோம்.
இவை தவிர ஒருவருட முழுநேர இலவசத் திரைப்படக் கற்கை நெறியை மேற்கொண்டு வருகிறோம்.
திரைப்பட ஆர்வலர்களின் தேடல்களை இலகுவாக்கும் பொருட்டு, எம்மிடமுள்ள திரைப்படங்களைப் பல தொகுப்புகளாகத் தொகுத்துள்ளோம்.
எமது சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமானவை
திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளை தனித்தும் பிற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும் இலவசமாக நடாத்தி வருகிறோம்.
திரைப்படப் பட்டப் படிப்புகளை தனித்தும் பிற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும் இலவசமாக நடாத்தி வருகிறோம்.
மக்களிடையே திரைப்பட இரசனையை மேம்படுத்தும் நோக்கில், எமது தலைமைக் காரியாலயத்திலும், தன்னார்வ திரை இரசனை இயக்கங்கள் ஊடாகவும், உலகத் திரைப்படங்களைத் திரையிட்டு, அதுசார்ந்த விவாதங்களை நடாத்தி வருகிறோம்.
புத்தகங்கள், எண்மின் காணொளி வட்டு (DVD) மற்றும் திரைப்படத் திரையிடலுக்குத் தேவையான உபகரணங்களை இரவல் வழங்கி வருகிறோம்.
திரைப்படங்கள், திரைப்படத்துறை சார்ந்த வரலாறுகள், மற்றும் திரைப்படத்துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட கண்காட்சிகளை நடாத்துதல்.
பிரசித்தமான திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நிகழ்வுகளிலும், கடற்கரைகள் மற்றும் பிற சாத்தியப்படக்கூடிய வெளியிடங்களிலும் முகாம்களை அமைத்து சர்வதேசத் திரைப்படங்களை நாள் முழுவதும் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.
எமது செயல்பாடு சார்ந்து மக்களின் கருத்துக்கள்.
Oscar nominated Iranian film director, producer, and screenwriter
This library will be a platform to have the opportunity to have access to watch variety of films and gain knowledge by reading books related to films. I am absolutely convinced this effort is praiseworthy. I congratulate the people responsible for this project and wish them all the success in the
Jury for International film festivals. Documentary film producer. Award winning author
I didn't go to film school, I learned everything from watching films around the world. The Balu Mahendra Library will be greatly beneficial to our aspiring young
Award winning Canadian Tamil filmmaker
மிகவும் பயனுள்ள முயற்சி. சமூக அக்கறையுடன் நடாத்தப்படும் இம்முயற்சியில் சம்பந்தப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் எனது ஆசிகள். உங்களின் இந்த சமூக அக்கறையான முயற்சிக்கு ஆண்டவர் என்றும்
Head - Civil Engineering, Department of Civil Engineering, Faculty of Engineering, University of Jaffna
அன்பு மீதூரும் பண்பான இளையோரை கண்டதில், கலந்து உரையாடியதில் உண்டி சுவைத்தபடி உள்ளவை கதைத்ததில் நெஞ்சுக்கு இனிய நினைவுகள் தந்ததில் மகிழ்வும் நிறை நன்றியும் செல்வங்களே…
உங்கள் அறம் நிறை பணி ...
கிளிநொச்சி பேருந்து தரிப்பிடச் சந்திக்குப் பக்கத்தில் இப்படி ஒரு அற்புதமான முயற்சி சத்தமில்லாமல் இயங்கி கொண்டிருப்பதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. ரம்யா. கம்ஷி, கோபிசாந் போன்ற இளைஞர்களின் ...
Journalist with The Hindu
கிளிநொச்சி மாவட்டத்தில், திரைப்படத் துறையும், இலக்கியத் துறையும் இணைந்த ஒரு அறிவுக் கருவூலம் என இந்த நூலகத்தை நான் உணருகின்றேன். வசதியான பௌதீகச் சூழலும், கற்கும் ஆர்வமிக்க இளந்தலைமுறையும் ...
Field Project Associate UNDP (United Nations Development Programme) Kilinochchi district
பாலு மகேந்திரா நூலகம்!
காலத்தின் தேவை கருதிய ஒரு அசாதாரண முயற்சி.
ஆர்வமும் அர்ப்பணிப்பும் இணையும் போது சாதனைகள் செய்வது சாத்தியமே!
வாழ்க!
Journalist
கிளிநொச்சி மாவட்டத்தில் தனது இயங்குநிலையை ஆரம்பித்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தின் பணி கனதியானது என்பதை கடந்த 2021.03.27 ஆம் திகதி நான் நேரடியாகக் கண்டிருந்தேன். போருக்குப் பின்னர் பெருவெற்றிடமாகியிருந்த ...
Member of parliament (MP), Former Principal at Kn/ Kilinochchi Maha Vidyalayam
இளைய தலைமுறையின் நல்லதோர் முயற்சி. சமூக அக்கறையும், சூழல் மீதான கரிசனையும், வரலாற்றுப் பிரக்ஞையும், மனித நேயமும், புத்தார்வமும் உள்ள இளையோரை பாலு மகேந்திரா நூலகத்தில் காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ...
Journalist