பாட்டி வடை சுட்ட கதை - பயிற்சிக் காணொளி

பாலு மகேந்திரா நூலகத்தின் திரைப்பட முதுநிலைக் கற்கைநெறியைத் தொடரும் மாணவர்கள், படத்தொகுப்பு மற்றும் ஒலியமைப்பு தொடர்பான அடிப்படை விடயங்களைப் பயின்றுகொண்டிருக்கும் நிலையில், படப்பிடிப்பின் போது Live Sound ஐ எவ்வாறு ஒலிப்பதிவு செய்வது மற்றும் படத்தொகுப்பிற்கு ஏற்ற பார்வைக்கோணத்தில் எவ்வாறு ஒளிப்பதிவு செய்வது போன்ற விடயங்களைப் பயிற்சி செய்யும் முகமாக ‘பாட்டி வடை சுட்ட கதையினை’ மையமாகக் கொண்ட காணொளியொன்றினை எடுத்திருந்தனர்.
இக்காணொளிக்கான படப்பிடிப்பு 09.03.2021 அன்று நடிபெற்றிருந்த நிலையில், திரைப்படத் தயாரிப்பில் உள்ள மிக முக்கியமான துறைகளில் மாணவர்கள் ஒவ்வொருவரும் பணியாற்றியதுடன், படப்பிடிப்புத்தளத்தின் நேரடி அனுபவங்களையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.

News & Event