சினம்கொள் திரைப்படத் திரையிடல்

புலம்பெயர் ஈழத்துத் தமிழ் இயக்குனரான ரஞ்சித் ஜோசப் அவர்களின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டில் வெளியான முழு நீளத்திரைப்படமான சினம்கொள் திரைப்படமானது 27.03.2021 அன்று மாலை 3:00 மணியளவில் பாலு மகேந்திரா நூலகத்தில் திரையிடப்பட்டது.
குறித்த திரையிடலில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறிதரன், ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலர் உட்பட பாலு மகேந்திரா நூலக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு திரைப்படத்தைப் பார்வையிட்டனர்.
திரையிடலைத் தொடர்ந்து, திரைப்படம் தொடர்பில் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அவர்களுடனான கலந்துரையாடல் இணையவாயிலாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது திரைப்படம் பற்றிய கருத்துக்களையும், திரைப்பட படப்பிடிப்பின் போதான தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டிருந்தார். அத்துடன், பாலு மகேந்திரா நூலக மாணவர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்களின் திரைப்படம் சார்ந்த கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.
தொடர்ந்து, சினம்கொள் திரைப்படத்தில் நடித்தவர்களான நர்வினி டெறி, தீபச்செல்வன்… ஆகியோரும் திரைப்படம் தொடர்பான தமது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

News & Event