நூலக தரிசிப்பு திருமதி. ரூபாவதி கேதீஸ்வரன்

பாலு மகேந்திரா நூலகம் ஆரமிக்கப்பட்ட நாள் முதல் முக்கிய பிரமுகர்கள் பலரும் நூலக தரிசிப்பை மேற்கொண்டு வருவதுடன், இளைஞர்களின் முயற்சியில் உருவாக்கம் பெற்று சிறப்புற நடைபெற்றுக்கொண்டிருக்கும் நூலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தமது கருத்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 30.04.2021 அன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரன் அவர்கள் எமது பாலு மகேந்திரா நூலகத்திற்கு வருகைதந்து பார்வையிட்டதுடன், ஈழத்தின் திரைப்படத்துறையில் பாலு மகேந்திரா நூலகமானது முக்கிய வரலாற்று தடம்பதிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பிரமுகர்களின் வருகையும், அவர்களது வாழ்த்துக்களும் எமது நூலக வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைவதுடன், எமது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு பாலு மகேந்திரா நிர்வாகத்தினர் ஆகிய நாம் எமது மனமுவந்த நன்றிகளத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

News & Event