பாலு மகேந்திரா நூலகத்தை தற்காலிகமாக மூடுதல்

பாலு மகேந்திரா நூலகமானது தனது செயற்பாடுகளை செவ்வனே செய்துகொண்டு வருகின்ற நிலையில், எமது நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் - 19 இன் மூன்றாவது அலை காரணமாக நாடு பூராகவுமே முடக்கவேண்டிய சூழல் உருவாகி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
இதன்பிரகாரம், பாலு மகேந்திரா நூலகத்தால் பொதுவெளியில் நடைபெறும் வாரந்த திரையிடல் மற்றும் வாசிப்பும் உரையாடலும் ஆகிய நிகழ்வுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுத்துவதுடன், கொவிட் நிலமை சாதாரணமடைந்ததன் பிற்பாடு இவ்விரு நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
அத்துடன், பாலு மகேந்திரா நூலகத்தில் நடைபெறும் ஒருவருட முழுநேர இலவசத் திரைப்படக் கற்கைநெறியை 15 மாணவர்கள் கற்றுவருகின்றனர். இந்நிலையில், நேரடியாக இக்கற்கையின் வகுப்புகளைத் தொடரமுடியாத சூழலில் மாணவர்களுக்கான கற்கைகள் அனைத்தும் இணைய வாயிலாக நடைபெறும்படி ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டு, 30.04.2021 அன்று மாணவர்கள் அனைவரும் தமது சொந்த ஊரிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

News & Event