180 வரையான ஈழத்து புத்தகங்கள் கொள்வனவு
'எங்கட புத்தகங்கள்' மற்றும் 'சிறகுகள் அமையம்' இணைந்து புத்தக தினத்தை முன்னிட்டு 23.04.2021 முதல் 25.04.2021 வரை ஏற்பாடுசெய்திருந்த ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியில் பாலு மகேந்திரா நூலகம் சார்பாக நாம் கலந்து கொண்டதுடன், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த 180 வரையான புத்தகங்களை எமது நூலகத்திற்காக கொள்வனவு செய்திருந்தோம். அத்துடன், இப்புத்தகங்கள் அனைத்தையும் பாலு மகேந்திரா நூலக வாசகர்கள் பயன்படுத்தும் வகையில் எமது நூலகத்தில் நாம் காட்சிப்படுத்தியுள்ளோம்.