ஈழத்தின் மூத்த திரைக்கலைஞன் நவரட்ணம் கேசவராஜா அவர்களுக்கு அஞ்சலி

நினைவஞ்சலி நிகழ்வு
ஈழத்தின் மூத்த திரைக்கலைஞன் நவரட்ணம் கேசவராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமான வணக்க நிகழ்வு 23.01.2021 அன்று இணையவாயிலாக நடைபெற்றது. இந்நினைவஞ்சலி நிகழ்வினை திரு. நவரட்ணம் கேசவராஜா அவர்களது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒழுங்கமைத்திருந்தனர்.
இந் நிகழ்வானது, திரு. நவரட்ணம் கேசவராஜா அவர்களின் குடும்பத்தினர் உட்பட கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நோர்வே, இலங்கை, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களின் ஒருங்கிணைவில் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றிருந்தது.
இந்த நினைவு வணக்க நிகழ்வில் பாலு மகேந்திரா நூலகத்தின் சார்பில், நூலகத்தின் பொருளாளர் ரவீந்திரன் கோபிஷாந் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். அத்துடன், நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கலுரை நிகழ்த்திய பலரும், அவருடனான தமது கலைத்துறை பணிகளையும், நினைவுகளையும் எடுத்துரைத்திருந்தமை குறிபிடத்தக்கது.

News & Event