தைப்பொங்கல்

தைப்பொங்கல் என்பது, எமக்கு ஒளி கொடுக்கும் சூரிய பகவானுக்கும், விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தும் முகமாகக் கொண்டாடப்படும் தமிழர்களின் திருநாளாகும். இந்நிலையில், 15.01.2021 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலுமகேந்திரா நூலகத்தின் வளாகத்தில் தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அத்துடன் தை மாதத்தில் பல நற்காரியங்களை ஆரம்பித்து மேற்கொண்டு வருவது தமிழர்களின் பாரம்பரியமாகும். அதனடிப்படையில், எமது நூலகத்தால் நடாத்தப்படும் ஒருவருட முழுநேர இலவசத் திரைப்படக் கற்கைநெறியின் ஆரம்ப நாள் வகுப்புகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

News & Event