பாலு மகேந்திரா குடும்பத்தாரின் அன்பளிப்பு

எமது நூலகத்திற்கு ‘பாலு மகேந்திரா நூலகம்’ என்ற பெயரை வைப்பது தொடர்பில் அறியப்படுத்துவதற்காக இயக்குனர் திரு.பாலு மகேந்திரா அவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டிருந்தோம். அவ்வேளையில், திரு. பாலு மகேந்திரா அவர்களின் தாய்நாட்டில் எமது நூலகம் உருவாவதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், நூலகத்தின் வளார்ச்சிக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். மேலும், திரு. பாலு மகேந்திரா அவர்களின் சேகரிப்பில் இருந்த, அவரால் பயன்படுத்தப்பட்ட 200 வரையான திரைப்பட நூல்கள் உட்பட அவரது எழுத்தில் உருவான திரைக்கதைப் பிரதிகளையும், 2000 வரையிலான திரைப்பட எண்மின் காணொளி வட்டுகளையும் திரு.பாலு மகேந்திரா அவர்களின் குடும்பத்தினர் எமது நூலகத்திற்காக அன்பளிப்புச் செய்துள்ளனர். இவ்வாறாக, திரு.பாலு மகேந்திரா அவர்களின் குடும்பத்தினரது இந்த அன்பளிப்பானது எமது நூலகத்தின் வளர்ச்சிக்கான ஒரு அங்கீகாரமாகவே கருதுகின்றோம்.

News & Event