சிறுகதைப் போட்டி

பாலு மகேந்திரா நூலகத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறுகதைப் போட்டி ஒன்றினை நடாத்த முன்வந்துள்ளோம்.

பின்வரும் விதிகளுக்கு உட்பட்டு உங்கள் சுயவிபரக்கோவை மற்றும் சிறுகதைகளை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]

போட்டி விபரங்கள் மற்றும் விதிகள்:

 • ஒருவர் எத்தனை சிறுகதைகளையும் அனுப்பிவைக்கலாம்.


 • சிறுகதைகள் உங்கள் சொந்த ஆக்கமாகவும், முன்னர் வெளிவராததாகவும், வேறு கதைகளைத் தழுவியதாகவும் இல்லாதிருத்தல் வேண்டும்.


 • சிறுகதைகளை யுனிகோட் (Unicode) முறையில் தட்டச்சு செய்யப்பட்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.


 • சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.


 • சிறுகதைகள் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.


 • எமது தெரிவுக்குழுவினரால் சிறந்த 10 சிறுகதைகள் தெரிவுசெய்யப்பட்டு, அவை மூன்று பேர்கொண்ட நடுவர்களிடம் தனித்தனியாகக் கையளிக்கப்படும். நடுவர்களின் வரிசைப்படுத்தலின் அடிப்படையில் இறுதி முடிவு அறிவிக்கப்படும். இதில் நடுவர்களின் முடிவே இறுதியானது.


 • நடுவர்களாக திருமதி. கோகிலா மகேந்திரன் (எழுத்தாளர்), திரு. சயந்தன் (எழுத்தாளர்) மற்றும் திரு. ரதன் (திரைப்பட விமர்சகர்) ஆகியோர் கடமையாற்றுவர்.


 • வெற்றிபெறும் சிறுகதைகள் தொகுப்பாக வெளியிடப்படும்.


 • சிறுகதை உரிமம் என்றும் எழுத்தாளருடையது.


 • முடிவுகள் அறிவிக்கப்படும் நிகழ்வில், படைப்பாளர்களின் சிறுகதைகள் தொடர்பிலான பின்னூட்டங்கள் குறித்து நடுவர்களுடனான கலந்துரையாடல்கள் இடம்பெறும்.


 • முதலாம் பரிசு: 25 000 ரூபா

 • இரண்டாம் பரிசு: 15 000 ரூபா

 • மூன்றாம் பரிசு: 10 000 ரூபா

 • 10 ஆறுதல் பரிசுகள்: ஒவ்வொரு சிறுகதைக்கும் தலா 5 000 ரூபா • இச்சிறுகதைப் போட்டியினை இணைந்து நடாத்துவோர் எங்கட புத்தகங்கள் மற்றும் பட்டறை.

  அனைத்துப் பங்குபற்றாளர்களுக்கும் முற்கூட்டிய வாழ்த்துக்கள்.

  இவ்வண்ணம்

  பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

  26.07.2021

  News & Event