எமது சேவைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமானவை
திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளை தனித்தும் பிற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும் இலவசமாக நடாத்துதல்.
திரைப்படப் பட்டப் படிப்புகளை தனித்தும் பிற தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்தும் இலவசமாக நடாத்துதல்.
மக்களிடையே திரைப்பட ரசனையை மேம்படுத்தும் நோக்கில், எமது தலைமைக் காரியாலயத்திலும், தன்னார்வ திரை இரசனை இயக்கங்கள் ஊடாகவும், உலகத்திரைப்படங்களைத் திரையிட்டு, அதுசார்ந்த விவாதங்களை நிகழ்த்துதல்.
புத்தகங்கள், எண்மின் காணொளி வெட்டு (DVD) மற்றும் திரைப்படத் திரையிடலுக்குத் தேவையான உபகரணங்களை இரவல் வழங்குதல்.
திரைப்படங்கள், திரைப்படத்துறை சார்ந்த வரலாறுகள், மற்றும் திரைப்படத்துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட கண்காட்சிகளை நடாத்துதல்.
நகரங்களில் இருந்து கிராமப்புறங்கள் வரை நடைபெறும் பிரசித்தமான திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நிகழ்வுகளிலும், கடற்கரைகள் மற்றும் பிற சாத்தியப்படக்கூடிய வெளியிடங்களிலும் முகாம்களை அமைத்து சர்வதேசத் திரைப்படங்களை நாள் முழுவதும் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.
எமது உறுப்பினர்கள் மட்டுமல்லாது பிற மாணவர்களும் தமது கல்வித் தேவைக்காக கணினி, நகல் எடுத்தல் மற்றும் இணையத் தேவைகளை எமது தலமை நூலகத்தில் முற்றிலும் இலவசமாகப் பூர்த்தி செய்துகொள்வதற்கான ஒழுங்குபடுத்தல்களை செய்துகொடுத்தல்.
திரைப்படத் துறைசார் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு போன்றவற்றிற்கான இட வசதிகளை இலவசமாக வழங்குதல்.
எமது தலைமை நூலகத்தில் Amazon Prime, MUBI, Netflix போன்ற, தேவைக்கேற்ப பாவிக்கும் திரைப்படத் தளங்களைப் (OTT or VOD) பயன்படுத்தி இலவசமாகத் திரைப்படங்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியளித்தல்.
சிறுவர் திரைப்படங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற வேற்று மொழித் திரைப்படங்களுக்கு தமிழில் துணைத் தலைப்புகளை உருவாக்குதல்.
வேற்று மொழி நூல்களை, வெளியீட்டாளர்களிடம் அனுமதி பெற்று மொழிபெயர்த்தல் மற்றும் ஒலி நூல்களை உருவாக்குதல்.
எமது தலைமைக் காரியாலயத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர் திரைப்படங்கள் மற்றும் சிறுவர் நூல்களைக் கொண்டு சிறுவர்களுக்கான ‘மகிழ்வகம்’ ஒன்றை பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளோம்.